Skip to main content

ஒரே நேரத்தில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்!! எதிர்ப்பில் கைகோர்ற்கும் மாநில கட்சிகள்!!

Published on 07/07/2018 | Edited on 07/07/2018

 

நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

 

 

அண்மையில் தேசிய சட்ட ஆணையகம் நாடாளுமன்ற தேர்தலையும் சட்டமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த பரிந்துரை செய்தது. மேலும் இதுபற்றி அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் கருத்தையும் கேட்க தேசிய சட்ட ஆணையம் முன்வந்துள்ளது.

 

இந்த பரிந்துரை அறிவிப்புக்கு பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இது தொடர்பாக தேசிய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், இன்று அங்கிகரிக்கப்பட்ட மாநில கட்சிகளுக்கான கருத்து கேட்பு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.

 

all party

 

 

 

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்ட அமைச்சர் சிவி.சண்முகம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அதேபோல் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவிடமும் கருத்துக்கேட்க தேசிய சட்ட ஆணையம் நாளை அழைப்புவிடுத்துள்ளது.  திமுக சார்பிலும் இந்த புது தேர்தல் முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  

 

இந்நிலையில் அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமிழ்நாடு காங்கிரஸ் இன்னும் பல மாநில கட்சிகள் இந்த தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் ஆந்திராவின் ஆளும் கட்சியான தெலுங்குதேசமும் ஒரே நேரத்தில் இரண்டு தேர்தலையும் நடத்தும் இந்த முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்