Skip to main content

குமரியில் பிரதமரின் பொதுக்கூட்டம் ரத்து!

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

 

           பிரதமா் மோடி  இன்று கன்னியாகுமாிக்கு வருகிறாா். விவேகானந்தா் பாலிடெக்னிக் கல்லூாி வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாா். முன்னதாக அவா் முதலில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு  நடந்து முடிந்த திட்டங்களை நாட்டுக்கு அா்பணிக்கிறாா். 

 

k

             

அதன்பிறகு  கட்சி நிகழ்ச்சியான பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவா்களோடு கலந்து தோ்தல் பரப்புரை ஆற்றுவதாக நிகழ்ச்சி இருந்தது. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதட்டமான சூழல் உருவாகியிருப்பதால் அதன் காரணமாக அவா் அரசு நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்கிறாா். மேலும் கட்சி நிகழ்ச்சியான பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 

k

 

 மதியம் 2.30 மணிக்கு நடக்கும் இந்த அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் மோடி பின்னா் அங்கிருந்து  ஹெலிகாப்டாில் கன்னியாகுமாிக்கு வருகிறாா். இதையொட்டி கன்னியாகுமாியில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டிருப்பதோடு விழா நடக்கும் இடத்தை சுற்றி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்