Published on 25/11/2018 | Edited on 25/11/2018

மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷ் உடலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அம்பரீஷ் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

இந்நிலையில் அவரின் நெருங்கிய தோழரான ரஜினிகாந்த் அம்பரீஷ் மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் அம்பரீஷ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூரில் கண்டீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.