Skip to main content

கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி; நீச்சல் பழக சென்றபோது சோகம்!

Published on 04/09/2018 | Edited on 04/09/2018
mp


சேலம் அருகே தனியார் கல்குவாரியில் உள்ள குட்டையில் நீச்சல் பழகச்சென்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
                                                                                                
 
சேலம் அம்மம்பாளையம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த சிவபிரகாசம் மகன் கவுசிக், இவருடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் மாரிமுத்து. இருவரும் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று காலை ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு, நரசோதிப்பட்டி அருகே உள்¢ள தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி பகுதிக்கு நண்பர்கள் மூன்று பேருடன் சென்றுள்ளனர்.


கல்குவாரியில் இருந்து வெள்ளைக்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தோண்டப்பட்ட ஆழமான குழிகளில் சமீபத்தில் பெய்த மழை நீர் குட்டையாக தேங்கி இருக்கின்றன. அந்தக் குட்டைக்குள் இறங்கி மாணவர்கள் குளித்தனர். அப்போது குட்டையின் ஆழமான பகுதிக்கு மாணவர்கள் கவுசிக், மாரிமுத்து ஆகிய இருவரும் சென்றதால் அவர்களால் திரும்பவும் கரைப்பகுதிக்கு வர முடியவில்லை. நீச்சலும் சரிவர தெரியாததால் அவர்கள் நீரில் மூழ்கினர்.


இதனால் செய்வதறியாது தவித்த மற்ற மூன்று மாணவர்களும் அவரவர் வீட்டுக்கு திரும்பிவிட்டனர். இதை பெற்றோரிடம் கூறினால் என்னாகுமோ என்ற பயத்தில் அவர்கள் கல்குவாரியில் நடந்த சம்பவங்களைக் கூறாமல் மறைத்துவிட்டனர்.


இந்நிலையில், வீட்டில் இருந்து கிளம்பிய குழந்தைகளைக் காணவில்லை என்று கவுசிக், மாரிமுத்து ஆகியோரின் பெற்றோர் சூரமங்கலம் போலீசில் நேற்று இரவு புகார் அளித்தனர். 


இன்று காலையில் கல்குவாரி தொ-ழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். அங்கே குட்டை நீரில் சிறுவர்கள் சடலம் மிதப்பதை அறிந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார், தீயணைப்புத்துறை வீரர்கள் ஆகியோர் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


ஒரே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


எச்சரிக்கை பலகை வேண்டும்:  கல்குவாரி குட்டைகளில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவர்கள் பலியாகும் சம்பவம் சேலத்தில் அடிக்கடி நடந்து வருகிறது. பெரும்பாலும், பயன்பாடற்ற குவாரி குட்டைகளில்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அவ்வாறு பயன்பாடற்ற குவாரி குட்டைகளை மூடி வைக்க வேண்டும். மேலும், எச்சரிக்கை பலகையும் வைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'' 'அடிச்சுக் கூட கேப்பாங்க அப்பையும் சொல்லாதீங்க';அது அவர் காமெடிதான்'' - நடிகர் வடிவேலு உருக்கம்  

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Actor Vadivelu press meet about marimuthu

 

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து (57) நேற்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்திருந்த நிலையில், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பு மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்பு நேற்று மாலை சென்னையிலிருந்து அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

Actor Vadivelu press meet about marimuthu

 

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு மாரிமுத்துவின் மறைவு குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், 'நடிகர் மாரிமுத்துவுக்கு திடீரென இப்படியாகும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.  நான் மதுரையில இருக்கேன். நேத்துதான் என்னுடைய தம்பிக்கு 13 வது நாள். அதற்காக இங்கு வந்தபோது தான் எனக்கு இந்த தகவல் தெரிய வந்தது. நான் கூட சீரியலில் தான் அப்படி ஏதும் கிளைமாக்ஸ் பண்ணி இருக்கிறார் என்று நினைத்தேன். முதலில் நம்பவில்லை. கடைசியில் உண்மையிலேயே அவர் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பில் இறந்து விட்டார் என தெரிய வந்தது. ரொம்ப கஷ்டமா போச்சு. ஏன் இப்படி எல்லாம் நடக்குது ஒண்ணுமே புரியல. ராஜ்கிரண் ஆபீஸ்ல நானும் அவரும் நெருக்கமா பழகினோம். அவருடைய படம் கண்ணும் கண்ணும். அதில், அடிச்சுக் கூட கேப்பாங்க அப்பையும் சொல்லாதீங்க என்ற காமெடி அவர்தான் உருவாக்கினார். அதேபோல் கிணத்த காணோம் என்கிற காமெடி அவர்தான் பண்ணினார். பெரிய நகைச்சுவை சிந்தனையாளர். அவர் ரொம்ப மனசு விட்டு சிரிப்பார். அவர் மனைவி பிள்ளைகளோடு குடும்பமாக பேட்டி கொடுத்திருந்தார். சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தார். திடீர்னு பார்த்தா இப்படி நடந்து விட்டது. பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது'' என்றார்.

 

 

 

Next Story

மாரிமுத்துவின் பரபரப்பான இறுதி திக் திக் நிமிடங்கள்; காரை ஓட்டிச் செல்லும் சிசிடிவி காட்சி

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

 Marimuthu's sensational final tik tik minutes; CCTV footage of the car driving away

 

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து(57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை, சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்துள்ளனர். சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இன்று மாலை அவரது உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது.



நாளை காலை அங்குள்ள மக்களுக்காக அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்த மாரிமுத்து திடீரென ஏற்பட்ட வலி காரணமாக தானே காரை எடுத்துக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் யாருடனோ செல்போனில் பேசியபடி வெளியே வந்த மாரிமுத்து பின்னர் காரில் ஏறி இன்டிகேட்டரை போட்டு பதற்றமில்லாமல் காரை ஓட்டிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.