கோவை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை புலியகுளம் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை துவங்கினார். உடன் வானதி சீனிவாசன், அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ஜுனன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர்.
சாமி தரிசனத்திற்கு பின் பேசிய சி.பி.ஆர்., தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். மீண்டும் மத்தியில் மோடி அரசு அமையும். நதிகள் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். முதற்கட்டமாக கோதாவரி காவிரியுடன் இணைக்கப்படும். அதே போல் கோவைக்கு புதிய ரயில்கள் இயக்கப்படும். என்னை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அமித்ஷா, மோடி, நிதின்கட்கரி, ஓ.பி.எஸ்., முதல்வர் ஆகியோர் கோவைக்கு வர இருக்கின்றனர்.
கோவையின் அடிப்படை தேவையான குடிநீர், சாலை வசதிகள் செய்து தரப்படும் என்றவர் புலியகுளம் விநாயகர் கோயில் வாசலில் இருந்து தனது வாகன பிரச்சாரத்தை துவங்கினார். மேலும் அவர் பேசியதாவது: கம்யூனிஸ்ட் கட்சிகள் இதுவரை எதுவும் செய்யவில்லை அதிமுக பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு நலத்திட்டங்களை இவர்கள் செய்ததாக பொய் பிரச்சாரம் கூறி வருகின்றனர் என்றார். மத்திய அரசின் விட்டுப் போன பல்வேறு நலத்திட்டங்களை நாங்கள் வெற்றி பெற்று மீண்டும் அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவோம் எனவும் உறுதியளித்தார்.