Skip to main content

“தமிழக முதல்வர் தான்  இந்தியாவிற்கே  வழிகாட்டியாக இருக்கிறார்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 22/03/2025 | Edited on 22/03/2025

 

 Tamil Nadu Chief Minister is the guide for India says Minister I. Periyasamy

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு  உட்பட்ட கன்னிவாடி, ஆத்தூர், நிலக்கோட்டை, நவாமரத்துப்பட்டி, காந்திகிராமம்  ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் காலை  மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல பேருந்து  வசதி  வேண்டும் என ஊரக வளாச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அவர்களின் கோரிக்கையை  ஏற்று தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதால்   மேற்கண்ட கிராமங்களுக்கு புதிய வழித்தடத்தில் 8 பேருந்துகள்  இயக்கப்பட்டன.  இதற்கான துவக்க விழா திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.  

 Tamil Nadu Chief Minister is the guide for India says Minister I. Periyasamy

விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார்.  திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி  திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம்,  மேயர் இளமதிஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, திண்டுக்கல் கிழக்கு  மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, துணைச் செயலாளர்கள்  ஆ.நாகராஜன், மார்கிரேட்மேரி, பிலால் உசேன், பொருளாளர் சத்தியமூர்த்தி,  தலைமை கழக செயற்குழு உறுப்பினர்கள் ஆத்தூர் நடராஜன், தண்டபாணி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மண்டல பொது மேலாளர்  கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். 

 Tamil Nadu Chief Minister is the guide for India says Minister I. Periyasamy

விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  ஐ.பெரியசாமி பேசும்போது, “ திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழக  முதல்வரிடம் நாம் கேட்கும் அனைத்து நலத்திட்டங்களையும் வாரி வழங்கும் வள்ளலாக தமிழக முதல்வர் உள்ளார். கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி  ஏற்படுத்திக் கொடுத்தால் தான் இந்த கிராமம் முன்னேறுவதோடு அங்குள்ள  மாணவர்களும், கல்வியில் உயர் நிலையை அடைவார்கள். விவசாயிகளும்  தங்களுடைய விளை பொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு கொண்டு  சென்று விற்பனை செய்ய முடியும். இங்கு கட்சியை சேர்ந்த பலர்  வந்துள்ளனர்.  இந்த ஒற்றமையை பார்க்கும்போது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  அழைக்காவிட்டாலும், பேர் சொல்ல மறந்தாலும் எதையும் எதிர்பார்க்காமல்  கழகப் பணி ஆற்றுபவர்கள் தான் நம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும்  சமம், எல்லாருக்கும் எல்லாம்  என்ற நிலையை உருவாக்குவது தான் திராவிட  மாடல் ஆட்சி. முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் வந்த தலைவர் மு.க.ஸ்டாலின் கொள்கைகளை,  நலத்திட்டங்களை பின்பற்றி தான் அனைத்து முதல்வரும் செயல்படுகிறார்கள்.  தமிழகம் தான் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது. மக்களுக்கான ஆட்சி  மக்கள் நன்மைக்கான ஆட்சி, தமிழகத்தில் நடைபெறுவது தான்” என்று கூறினார். 

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சிவகுருசாமி,  நெடுஞ்செழியன், வெள்ளிமலை, பாறைப்பட்டி ராமன், பிள்ளையார்நத்தம்   முருகேசன், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்பையா, போக்குவரத்து கழக செயலாளர் பொன் செந்தில்,  மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்  இல.கண்ணன், இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், பொதுக்குழு  உறுப்பினர்கள் அக்பர், டென்னி, திண்டுக்கல் மாநகர பொருளாளர்  மீடியாசரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்  பாறைப்பட்டி வாஞ்சிநாதன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள்  கும்மம்பட்டி விவேகானந்தன், விடுதலை முருகன். பேரூராட்சி மனறத்  தலைவர்கள் கன்னிவாடி தனலெட்சுமிசண்முகம், ஸ்ரீராமபுரம் சகிலாராஜா, அய்யம்பாளையம் ரேகா ஐய்யப்பன்,  திண்டுக்கல் பகுதி செயலாளர்கள்  ராஜேந்திரகுமார், பஜ்ரூல்ஹக், ஜானகிராமன், சந்திரசேகர் மற்றும் முன்னாள்  ஒன்றிய குழு உறுப்பினர்கள் காணிக்கைசாமி, காளீஸ்வரி மலைச்சாமி,  பாப்பாத்தி, செல்விகாங்கேயன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள்  கே.புதுக்கோட்டை ரமேஷ் மற்றும் திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர்கள்  அருள்வாணி, அமலோற்பவமேரி, மனோரஞ்சிதம், சுபாசினி, நெல்லைசுபாஷ்  உட்பட திமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள்  பலர் கலந்து கொண்டனர். நிறைவாக அரசு போக்குவரத்து கழக செய்தி  மக்கள்தொடர்பு அலுவலர் குர்சித்பேகம் நன்றி கூறினார்.

சார்ந்த செய்திகள்