Published on 06/01/2022 | Edited on 06/01/2022
![kodanad incident case investigation police in coimbatore district](http://image.nakkheeran.in/cdn/farfuture/noxGi2hYD5ri3q-MMy4PlE5IF6QIVf8s7ZNYWUflLI8/1641479029/sites/default/files/inline-images/kodand323.jpg)
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மூன்றாவது நபராகக் குற்றஞ்சாட்டப்பட்ட தீபு என்பவரிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் தீபு என்பவரிடம் கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் இ.கா.ப., தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கரோனா நோய்த்தொற்று காரணமாக, இரண்டு முறை தீபுவிடம் விசாரணை தள்ளிப் போன நிலையில், தற்போது விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அவரது கோடநாடு இல்லத்தில் காவலாளியைக் கொலை செய்துவிட்டு, கொள்ளை நடந்தது. இவ்வழக்கு தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு, பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டனர். 80- க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.