அசாம் மாநிலத்தில் பெண் பக்தர்களை கட்டி அனைத்து, முத்தம் கொடுக்கும கிஸ்சிங் பாபா கைது செய்யப்பட்டார்.
அசாம் மாநிலம், மோரிகான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமு பிரகாஷ் சவுகான். 31 வயதான இவர் தன்னை ஒரு விஷ்ணு பக்தன் என கூறி அப்பகுதி மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவபோல் நடித்துள்ளார். இவரது அணுகுமுறையை பார்த்த அப்பகுதி பக்தர்கள் அவர் மீது மரியாதை வைத்ததோடு அவர் சொல்லுவதையும் கேட்டு வந்தனர். இதனை பயன்படுத்திய சவுகான், தன் உடலில் கடவுள் இறங்கியுள்ளார் என்று பக்தர்களுக்கு ஆசி வழங்க தொடங்கினார்.
தன்னை நம்பி வரும் பக்தர்களை கட்டி அனைத்து முத்தம் கொடுத்து அருளாகி வழங்க தொடங்கினார். இது ஏன் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பும்போது, இப்படி செய்வதால் மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள் தீரும். ஆகையால் பெண்கள் இவரை கடவுளாக நினைக்க வேண்டுமே தவிர வேறு எதுவும் நினைக்கக் கூடாது என்று ராமு பிரகாஷ் சவுகான் தாயாரும் பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.
சாமியாரின் தாயாரே இப்படி சொல்வதால், பாபா சாமியார் மீது சந்தேகப்பட வேண்டாம் என்று பெண்களும் அதிக அளவு அவரை சந்திக்க வந்தனர். நாளுக்கு நாள் பெண்கள் பக்தர்கள் அதிகமாக வந்ததால் தனியார் தொலைக்காட்சி ஒன்று இதனை படம் பிடித்து செய்தி வெளியிட்டது.
இதையடுத்து பெண்களை வசியப்படுத்தி மோசடி செய்வதாக சிலர் குற்றம் சாட்டியதோடு அவர் போலி சாமியார் என்றும் கூறினர். ராமு பிரகாஷ் சவுகான் பாபாவை சிலர் கிஸ்சிங் பாபா என்று வாட்ஸ் அப்புகளில் பரபரப்பினர்.
இதுகுறித்து சிலர் போலீசாருக்கும் தகவல் அளித்தனர். ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார் கடந்த 22ஆம் தேதி ராமு பிரகாஷ் சவுகானை கைது செய்தனர். மேலும் சவுகானின் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்து, அவருக்காக பிரச்சாரம் செய்து வந்த அவரது தாயாரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.