Published on 08/10/2020 | Edited on 08/10/2020

கள்ளக்குறிச்சி மாவட்டம், தரணி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய பாக்கித் தொகை 26 கோடி ரூபாயை, கடந்த 2 ஆண்டு காலமாக வழங்க மறுத்துவரும் ஆலை நிர்வாகத்தைக் கண்டித்தும், தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் கறுப்புக் கொடியுடன் கரும்பு விவசாயிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இறுதியாக மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து நிர்வாகிகளுடன் மனு கொடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தலைவர் ஆர்.சாந்தமூர்த்தி, செயலாளர் ஜி. ரகுராமன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.