பெரம்பலூர் துரைமங்கலம் பகுதியை சேர்ந்த சேட்டு மகள் கமருன்னிசா. இவர் அரியலூர் அருகேயுள்ள இலந்த குழி என்ற ஊரில் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி செய்து வந்தார். தினசரி பஸ்சில் அல்லிநகரம் சென்று, அங்கு இருந்து மொபட் மூலம் பள்ளிக்கு போய் வருவது வழக்கம். சம்பவத்தன்று அதே போல் பஸ்சில் சென்று அல்லிநகரத்தில இருந்து மொபட்டில் பள்ளிக்கு செல்லும் வழியில் டூவீலரில் வந்த இரண்டு வாலிபர்கள் கமருன்னிசாவை வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.
வாக்குவாதத்தின்போது ஒருவன் கமருன்னிசாவின் கழுத்தில் கத்தியால் குத்தினான். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கமருன்னிசாவின் உயிர் போனது. அவரது அலறல் வேட்டு அக்கம் இருந்த மக்கள் ஓடி வந்தனர். இருவரில் ஒருவன் தப்பினான். பிடிபட்ட மற்றொருவனை தர்ம அடி கொடுத்து குன்னம் போலீசிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் பெரம்பலுரை சேர்ந்த செல்லமுத்து மகன் ஆனந்த் என்பது தெரிய வந்தது. கமருன்நிஷாவும் தானும் கடந்த 2006-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அவருக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்தேன். ஆனால் இடையில் திடீரென என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். என்னை திருமணம் செய்யவும் மறுத்து விட்டார். மேலும் அவருக்கு வேறொரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயம் செய்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கமருன்நிஷாவை கொலை செய்ய எனது நண்பன் அப்பார்க்குடன் சேர்ந்து திட்டமிட்டேன். அதன்படி இன்று காலை கமருன்நிஷா பள்ளிக்கு செல்லும் போது அவரை நண்பருடன் சேர்ந்து கொலை செய்தேன் என்றார். தப்பியோடிய அவரது நண்பர் அப்பார்க்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இருவரும் பழகி வந்துள்ளனர். ஆனந்த் மது அருந்திவிட்டு திரிகிறார் என்று தெரிந்ததும் கமருன்னிசா, ஆனந்திடம் பேசுவதை நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.