
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்காக இவர்கள் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.
காவல்துறை வேனில் இருந்து இறங்கிய கருப்பசாமியிடம் பத்திரிகையாளர்கள் நெருங்க முடியாதபடி அழைத்துச் சென்றனர் போலீசார். இருப்பினும் அவரை பின்தொடர்ந்த பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தார்கள்.
அப்போது பேசிய கருப்பசாமி, நிர்மலா தேவிக்கு மரண பயத்தை ஏற்படுத்தி மிரட்டி வாக்கப்பட்ட வாக்குமுலம்தான் தற்போது வெளிவந்துள்ளது என்றார். 50 வயது கிழவி நிர்மலா தேவியை நாங்கள் இருவரும் எப்படி மூளை சலவை செயது மாணவிகளை அழைத்து வர சொல்ல முடியும். இது தவறான குற்றச்சாட்டு என்றவர், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்தார். நேற்று நன்றாக இருந்தவர், இன்று சோர்வாகவே காணப்பட்டார்.