திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ளது காட்டூர் கிராமத்தில் 700 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி சுற்றுவட்டாரத்தில் உள்ள 12 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிதண்ணீர் மற்றும் விவசாயத்திற்கும் இதுவே ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் உரிய அனுமதியின்றி ராட்சத இயந்திரங்களை வைத்து மண் எடுக்க முற்பட்ட போது அப்பகுதி மக்கள் அவர்களை மண் எடுக்க விடாமல் தடுத்தோடு.ஆர்.டி.ஓவை வரவழைத்து மண் எடுத்தவர்களின் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
அதோடு நிறுக்கொள்ளாத மண் கொள்ளையர்கள் அதேபகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவர் உதவியோடு மீண்டும் மண் எடுத்து வந்துள்ளனர். இதனால் மீண்டும் அப்பகுதி மக்கள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராமன் ''எதற்காக இப்படி முட்டுகட்டையா இருக்கீங்க,நாங்க ஒன்னும் சும்மா எடுக்கவில்லை முன்னாள் மாவட்ட ஆட்சியர் உத்தரவு கொடுத்தின் பெயரில் தற்போதுள்ள மாவட்ட ஆட்சியர் அனுமதியோடுதான் நாங்கள் மண் எடுக்கிறோம்'' என வெளிப்படையாக அந்த ஆர்டரை மக்கள் மத்தியில் காட்டவே, அனைவரும் வாயடைத்து சென்றுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் கடப்பாக்கம் ஏரியில் இருந்து தமிழக சாலை மேம்பாட்டிற்காக மண் எடுக்கும் ஆணையில் தற்போதுள்ள மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கையொப்பம் போட்டுள்ளார். அந்த கையொப்பமும் ஊராட்சி மன்ற தலைவர் மண் எடுக்க முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவு கொடுத்தார் என்கிற அந்த ஆர்டரிலும் தற்போதுள்ள மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கையெழுத்தும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆல்பி ஜான் வர்கீஸ் மாவட்ட ஆட்சியராக இருந்த தேதியில் பிரபு சங்கர் எப்படி கையெழுத்து போட முடியும், அப்படி போட்டாலும் சட்டப்படி குற்றம். இவர் யாருக்காக செய்தார் அல்லது செய்யச்சொல்லி யார் அழுத்தம் கொடுத்தார் என்கிற கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை தொடர்பு கொண்டபோது அவரது அலுவலக பணியாளர் எடுத்து அவர் முக்கியமான அலுவலக கூட்டத்தில் உள்ளார் எனவும் நீங்கள் என்னிடம் சொல்லுங்க அவரிடம் சொல்கிறேன் என தொடர்பை துண்டித்தார் . பிறகு அவரை தொடர்பு கொண்டு எடுக்கவில்லை.