Published on 03/04/2023 | Edited on 03/04/2023
கரூர் மாவட்டத்தில் வாலிபருடன் சேர்ந்து 19 வயது இளைஞர் ஒருவர் கஞ்சா கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வைகை நல்லூர் பஞ்சாயத்து வை.புதூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சூர்யா (வயது 19). குளித்தலை நகர் பகுதி பழைய கோர்ட் தெருவை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் முருகானந்தம் (வயது 36) ஆகிய இருவரும் திருச்சியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் குளித்தலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இவர்களை பரிசோதித்த போது இவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.