
‘கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலில் 'கந்த சஷ்டி கவசம்' குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாகவும் தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் தொகுப்பாளரான நாத்திகன் என்கிற சுரேந்தர் நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார். பிறகு புதுச்சேரி காவல்நிலையத்தில் அவர் சரணடைந்தார். அவரை தமிழக போலிசாரிடம் புதுவை போலிசார் ஒப்படைத்தனர். சரணடைந்த சுரேந்திரனை தமிழக போலீசார் சென்னை அழைத்துச் சென்றனர். எழும்பூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு 30- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுரேந்திரன் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அரசியல் ஆதாயம், மலிவான விளம்பரத்துக்காக பா.ஜ.க. என் மீது புகார் அளித்துள்ளது என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.