மக்கள் அதிகாரம் சார்பில் கல்லணையில் இன்று துவங்கியது. மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் தலைமை தாங்கினார், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜீ கொடி அசைத்து துவங்கி வைத்தார். மேலும் பலர் இந்த நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீ கொடி,
" காவிரிநீரில் தமிழகத்தின் உரிமையை மறுப்பதில் கர்நாடக அரசும்,வஞ்சிப்பதில் மத்திய பா.ஜ.க. அரசும் போட்டி போட்டுச் செயல்படும் வேளையில் உச்சநீதிமன்றமும் தன்பங்கிற்கு வஞ்சகம் செய்கிறது.இந்த வஞ்சகத்தால் தமிழகமக்கள் கொதித்துப் போயுள்ளனர். ஆனால் மத்திய அரசு இது பற்றி சற்றும் கவலைப்படவில்லை. இங்குள்ள இயற்கை வளங்களான நிலக்கரி, மீத்தேன், ஷேல்,பெட்ரோலியம் போன்றவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்டிக் கொழுக்க காவிரி டெல்டாவை திட்டமிட்டு பாலைவனமாக்குகிறது மோடி அரசு. மத்திய அரசின் இந்த தமிழக விரோதக் கொள்கைகளையும் திட்டத்தையும் முறியடிக்காமல் காவிரி நீர் உரிமையையும், தமிழக விவசாயத்தையும் காப்பாற்றமுடியாது", என்று கூறினார்.
மேலும் இக்கட்சி சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 21-4-2018 முதல் 30-4-2018 வரை கல்லணையிலிருந்து பூம்புகார்வரை பிரச்சார நடைபயணம் செய்ய இருக்கிறதாக தெரிவித்துள்ளார்.
காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்று இந்தப் பிரச்சாரப்பயணம் தற்போது நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.