Skip to main content

திருமாவளவனை புறக்கணித்த பட்டியல் இன மக்கள்!

Published on 12/05/2018 | Edited on 12/05/2018
thiruma

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அக்கிராமத்தை சேர்ந்த பட்டியல் இன மக்கள் சந்திக்காமல் புறக்கணித்தனர்.


பெரியகுளத்தை அடுத்த பொம்மிநாயக்கன்பட்டியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 24-ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடலை மற்றொரு மதத்தினர் வசிக்கும் தெரு வழியாக கொண்டு செல்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருபிரிவினரிடையே  தகராறு ஏற்பட்டதையடுத்து, பட்டியல் இனத்தவர்களின் வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டதோடு, ஏராளமான வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

 

இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தனது கட்சித் தொண்டர்களுடன் பொம்மிநாயக்கன்பட்டிக்கு வந்தார்
.  ஆனால் அவரை சந்திக்க அக்கிராமத்தை சேர்ந்த  பெண்கள் மறுத்துவிட்டனர்.

 

thiruma ma

 

கலவரம் நடந்து 15 நாட்களுக்கு பிறகு தற்போது திருமாவளவன் ஏன் வந்திருக்கிறார் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்கள்.  இதனால்  டென்ஷன் அடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள்,  பெண்களை,சமாதானப்படுத்தி  திருமாவளவனை வந்து சந்திக்குமாறு வற்புறுத்தி அழைத்தும் அவர்கள் செல்ல மறுத்துவிட்டனர். இதனால் திருமாவளவனை மனம்நொந்து போய்விட்டார்.  அதன்பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களை மட்டும் திருமாவளவன் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டார்.  

 

பட்டியல் இன மக்களுக்காக குரல் கொடுத்து வரும் திருமாவளவனையே அம்மக்கள் புறக்கணித்தது  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்