Skip to main content

கோவை குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பாஷா உயிரிழப்பு

Published on 16/12/2024 | Edited on 16/12/2024
kovai blaste ;Pasha paasedaway

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்திருந்த கைதி எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவு  காரணமாக  உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோவையில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 35 ஆண்கள், 10 பெண்கள் ஒரு குழந்தை என மொத்தம் 46 பேர் உயிரிழந்தனர். 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோவையில் 11 வெவ்வேறு இடங்களில் 13 குண்டுகள் வெடித்தது அந்த நேரத்தில் மிகவும் பரபரப்பான சம்பவமாக தமிழகத்தில் பேசப்பட்டது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில் அல்-உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.பாஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. 72 வயதான எஸ்.ஏ.பாஷா நீண்ட நாட்களாவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி பிணையில் வெளியே வந்திருந்த எஸ்.ஏ.பாஷா தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தற்போது அவருடைய இல்லத்தில் அவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்