‘அகவன்’ என்னும் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய கராத்தே தியாகராஜன், “ என்னுடைய நண்பர் ரவி நீண்ட காலமாக இந்த படத்தை வெளியிட இருக்கிறார்கள். தற்போது நண்பர் அன்புவின் உதவியால் இந்த படம் வெளியிட இருக்கிறார்கள். எனக்கு அன்புவை நேரடியாக தெரியாது அவரிடம் பேசியதுமில்லை, அவரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருமுறை அன்பு மீது குற்றச்சாட்டு ஒன்று வந்தது, அப்போது தயாரிப்பாளர் தானுவிடம் தொடர்புகொண்டு அன்பு யார் என்று கேட்டேன். அவர் சொன்னார், தமிழ் சினிமா அவரை பயன்படுத்திக்கொண்டால் மிகப்பெரிய அளவில் முன்னேறும். அன்பு ஒருவர்தான் ஒரு செக்கை வைத்துகொண்டும், ஒரு சிடியை வைத்துகொண்டு ஃபைனான்ஸ் தருபவர் என்றார். அப்படிபட்ட அன்பு, ரவிக்கு உதவி செய்திருக்கிறார்.” என்று கூறினார்.
மேலும் ரஜினி குறித்து பேசியவர், “ தமிழ்நாட்டில் சினிமாவையும் அரசியலையும் பிரித்து பார்க்க முடியாது. அப்படிப்பட்ட மாநிலத்தில் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியமைக்க சூப்பர் ஸ்டார் வருவார். அவருக்கு தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் உதவியாக இருக்க வேண்டும். அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா போன்றவர்களின் இடத்திற்கு கண்டிப்பா பலர் வருவார்கள். அண்ணன் ஸ்டாலின் கூட மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார். ஆனால் இறுதியான இடத்திற்கு இரண்டு பேர் வரவேண்டும். அதில் அண்ணன் ரஜினியும் வருவார். சினிமா மேடையில் அரசியல் பேச வேண்டாம் என்று பார்க்கிறேன். ஆனால், சிலர் சினிமா லாஞ்சில் அரசியல் பேசுகிறார்கள். நண்பர் சீமான் போன்றவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகப்பெரிய படை உடையவர். அவரை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று பாடல் வெளியீடு நிகழ்ச்சியில் எச்சரித்தார்.