இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைப்பெறுகிறது. ஆனால் தமிழகத்தில் இரண்டாம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைப்பெறுகிறது. இந்நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் விடுமுறை நாட்கள் மற்றும் சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை மனு பெறப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொ இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து காலை 10.00 மணி முதல் மாலை 3.00 வரை வேட்பாளர்கள் தங்களது தேர்தல் நடத்தும் மாவட்ட அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் எனவும் , வேட்பு மனுவுடன் வைப்பு தொகையை செலுத்த வேண்டும்.
மக்களவை தொகுதிக்களுக்கான பொது வேட்பாளர்கள் வைப்பு தொகை ரூபாய் 25,000 , ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வேட்பாளர்கள் ரூபாய் 12,500 யை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். இதே போல் சட்டமன்ற தொகுதிக்களுக்கான வைப்பு தொகை பொது வேட்பாளர்கள் ரூபாய் 10,000 , ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு ரூபாய் 5,000 யை வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் செலுத்த வேண்டும். வேட்பு மனுவை தாக்கல் செய்த பின் வேட்பாளர்கள் தங்கள் மீது நிலைவையில் உள்ள வழக்குகள் விவரங்களை கட்சி தலைமைக்கு அனுப்ப வேண்டும். அதன் பின் கட்சி தலைமை தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் மூலமாக தங்கள் கட்சியில் வேட்பாளர்கள் மீது உள்ள வழக்குக்களை விளம்பரங்கள் செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
பி.சந்தோஷ் , சேலம்.