Published on 21/07/2019 | Edited on 21/07/2019
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவானது 8300 கன அடி அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் குடகு உள்ளிட்ட பல்வேறு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும், மேலும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்பதாலும் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் நீர் திறப்பு அதிக்கப்படுத்தப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து 4 ஆயிரத்து 700 கன அடியும், கபினி அணையில் இருந்து 3500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை நீடித்து வருவதால் காவிரியில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.