
காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,
காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. இது தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். கர்நாடகவில் காலா படத்தை கட்டாயம் வெளியிட வேண்டும் என்று வெளியிடவில்லை. உலகம் முழுவதும் படம் வெளியாகிறது.
கர்நாடகவில் மட்டும் வெளியாகவில்லை என்றால் எல்லோருக்கும் தெரியவரும். இந்த காரணத்திற்காக படம் வெளியாகவில்லை என்றால் அது கர்நாடகத்திற்கு நல்லது அல்ல. காலா படம் வெளியாகும் திரையரங்கிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குமாரசாமி அதனை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.