![hj](http://image.nakkheeran.in/cdn/farfuture/77sWg_zQJ1BoPlwqK72etgQKzxMYkS8lZS2fzPDmZkA/1633972339/sites/default/files/inline-images/kamal_119.jpg)
பிரபல மலையாள நடிகரான நெடுமுடி வேணு, தமிழில் 'இந்தியன்', 'அந்நியன்', 'பொய் சொல்லப் போறோம்', 'சர்வம் தாள மயம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியா முழுவதும் நெடுமுடி வேணுவுக்கு மிகப்பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நெடுமுடி வேணு, அதிலிருந்து முழுமையாக மீண்டு வந்திருந்தார். நேற்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இன்று காலை தகவல் வெளியான நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் இறப்புக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, " 500 படங்களில் நடிகர் என்பதோடு, திரைக்கதாசிரியர், இயக்குநர் எனவும் பரிமளித்தவர் நெடுமுடி வேணு. தேசிய, மாநில விருதுகளை வென்றவர். 50 வருட சினிமா ஈடுபாட்டை நிறைவு செய்து மறைந்திருக்கிறார், அஞ்சலிகள்" என்று கூறியுள்ளார்.