அண்மையில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாரமருந்திய 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலைமையில் திடீர் ஆய்வு நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் மாற்றப்பட்டிருந்தார்கள் குறிப்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் இங்கு நியமிக்கப்பட்டிருந்தார். சட்ட ஒழுங்கு கூடுதல் ஏ.டி.ஜி.பியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த உத்தரவுகளை முடுக்கிவிட்டிருந்தார்.
இந்நிலையில் நேரில் சென்று கல்வராயன் மலைப் பகுதிக்கு சென்றுள்ள ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கல்வராயன் மலை, கரியாலூர், வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்திய நிலையில் சேராப்பட்டு பகுதியில் டிரோன்களை பார்க்க விட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இனி கல்வராயன் மலைப்பகுதியில் இது போன்ற கள்ளச்சாராயம் காய்ச்சும் நடவடிக்கைகளோ அல்லது வேறு தவறான நடவடிக்கைகளோ நிகழாத வண்ணம் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.