
திமுக தலைவர் மறைவையொட்டி அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு அனைத்து கட்சிகளின் சார்பில் இன்று காலை 10 மணியளவில் சென்னை தெற்கு மாவட்டம் சைதை மேற்குப் பகுதியில் மாவட்ட கழக செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மு.மகேஷ்குமார், எஸ்.குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் புகழஞ்சலி அமைதி ஊர்வலம் மேற்கு சைதாப்பேட்டை சாரதிநகர் பேருந்து நிலையம் அருகில் தொடங்கி ஜோன்ஸ் சாலை வழியாக கலைஞர் பொன்விழா வளைவு அருகே நிறைவடைந்தது.

இதில் காங்கிரஸ் வி.பி.தனசேகர், கோ.நடராஜன், டி.எம்.கே.முருகன், ஜி.சுஜாதா, இ.காசிலிங்கம், தேவசுந்தரி, மதிமுக மாவட்ட செயலாளர் பூவை.முஸ்தபா, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாண்டுரங்கம் மற்றும் சைதை சம்பத், சைதை மா.அன்பரசன், வழக்கறிஞர் எம்.ஸ்ரீதரன், களக்காடி எல்லப்பன் உள்ளிட்ட திமுக நர்வாகிகள் அனைத்துக்கட்சியினர் பொதுமக்கள் என 2000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.