![kalaignar statue at madurai bjp not allowed](http://image.nakkheeran.in/cdn/farfuture/I921ujIFqoCP7MLuSZPT3sC1Ob0AegF5A9Bz484pb4k/1613559447/sites/default/files/inline-images/th-1_654.jpg)
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் சிலையை மதுரையில் அமைப்பதற்கு அனுமதி தரவேண்டும் என திமுகவினர் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில், சிலை திறக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து மதுரை மாநகர்ப் பகுதியில் உள்ள சிம்மக்கல் வ.உ.சி. சிலை அருகே கலைஞருக்கு சிலை வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், சிம்மக்கல் பகுதியில் கலைஞரின் சிலையை வைக்கக்கூடாது என பா.ஜ.க.வினர் சார்பாக நேற்றைய தினம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இன்று மு.க.ஸ்டாலின், கலைஞர் சிலையைத் திறக்க உள்ள சூழ்நிலையில், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கே.கே.சீனிவாசன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து கலைஞரின் சிலையை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி குண்டுகட்டாகக் கைதுசெய்தனர். அதன்பிறகு, ஸ்டாலின் கலைஞர் சிலையைத் திறந்துவைத்தார்.