சென்னையில் நடைபெற்ற "காப்பான்" இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, நிஜ வாழ்வில் நான்கு பேருக்கு பயன்படும் விதமாக இருப்பேன் என கூறினார். மேலும் பேசிய அவர் "நீ எடுக்கும் முயற்சிகள் தவறலாம் விடா முயற்சிகள் தவறக்கூடாது என்றார். அதே போல் சமூக பணி செய்யலாம் எதையும் விளம்பரத்திற்காக செய்ய வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேசிய கவிஞர் வைரமுத்து, இந்த விழாவில் பங்கேற்றுள்ள ரஜினி பொருளை மட்டும் பகிர்ந்து கொடுப்பவர் அல்ல. தன் புகழையும் பெருந்தன்மையையும் பகிர்ந்து கொடுப்பவர் என்றும், சினிமா துறையில் உள்ளவர்கள் தங்கள் பணிக்கு சம்பளம் வாங்குகிறோம். அதோடு சமூகத்திற்கும் அவர்களுக்குமான உறவு முடிந்து விட்டதாக நினைக்காது. எனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன் என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய கவிஞர் கபிலன் வைரமுத்து நடிகர் சூர்யா பேசிய, புதிய கல்விக்கொள்கையை ரஜினிகாந்த் பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார் என்றார். மேலும் பேசிய அவர், சூர்யா பேசிய "புதிய கல்விக்கொள்கையை" கேட்ட சரஸ்வதியே தன் வீணையை தண்டாயுதமாக மாற்றி விட்டாள் என்று தெரிவித்தார். "காப்பான்" இசை வெளீயிட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் தெரிந்தது என்றும், அவரின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் என்றார். ரஜினி பேசினால் மோடிக்கு கேட்டிருக்கும்னு சொன்னார்கள், ஆனால் சூர்யா பேசியே மோடிக்கு கேட்டுள்ளது. மாணவர்கள் படும் கஷ்டத்தை கண் எதிரே பார்த்தவர் சூர்யா என்றும்,அதனால் தான் மாணவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார் நடிகர் சூர்யா என்றார்.