
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூலை 17- ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான நடைமுறைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், எதிர்க்கட்சித் துணை தலைவராக உள்ள ஓ.பன்னீர்செல்வதை மாற்றுவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
உட்கட்சி மோதலால் அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது தொடர்பாக, உரிய விளக்கம் கேட்டப் பின்னரே இறுதி முடிவை எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.