Skip to main content

தமிழகத்தில் ஜோக்கர் ஆட்சி நடக்கிறது: கர்நாடக மந்திரி பேட்டி!

Published on 26/08/2017 | Edited on 26/08/2017
தமிழகத்தில் ஜோக்கர் ஆட்சி நடக்கிறது: கர்நாடக மந்திரி பேட்டி!



காமராஜர் போல் நல்ல முதல்வர்கள் இருந்த தமிழகத்தில் தற்போது ஜோக்கர் ஆட்சி நடப்பதாக நாகூர் தர்க்காவிற்கு வந்த கர்நாடக மாநிலத்தின் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் ரோஷன் பேய்க் நக்கலாக கூறினார்.

கர்நாடக மாநிலத்தின் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் ரோஷன் பேய்க், நாகை மாவட்டம் நாகூர் தர்க்காவிற்கு சாமி தரிசனம் செய்ய இன்று காலை வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் ஏ.ஆர்.நவ்சாத் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார், "காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்க்கும் நல்லது நடக்க வேண்டும் என்றே பிராத்தனை செய்ய வந்தேன். தமிழகத்தில் காமராஜர், அண்ணாதுறை எம்.ஜி.ஆர், கருணாநிதி, பக்தவச்சலம் போன்ற சிறப்பான நல்ல மக்கள் முதல்வர்கள் இருந்தனர்.

அப்படி பட்ட தமிழகத்தில் தற்போது ஜோக்கர் ஆட்சி நடந்து வருகிறது. தமிழகத்தில் நல்ல அரசாங்கம் அமைய வேண்டும். தமிழகமும், கர்நாடகமும், பாகிஸ்தான், இந்தியா அல்ல. விரைவில் நல்லது நடக்கும். விரைவில் தண்ணீர் கிடைக்கும்." என்றார்.

- க.செல்வகுமார்

சார்ந்த செய்திகள்