திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் 04.05.2024 அன்று சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் கொலையா தற்கொலையா எனப் பல்வேறு கட்டங்களில், பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு பல்வேறு தகவல்கள் செய்திகளாகவும் வெளியாகி வருகிறது. சம்பவம் நடந்து 13 நாட்களுக்கு மேலாகியும் தற்போது வரை இந்த சம்பவம் குறித்து உறுதியான முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலையில் புதிய அதிகாரிகளை வழக்கு விசாரணையில் சேர்த்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு டி.என்.ஏ டெஸ்ட், உடற்கூறாய்வு முடிவுகள் என அறிவியல் பூர்வமான விசாரணைகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்தியாளர்களை சந்தித்திருந்த நெல்லையின் தென்மண்டல ஐ.ஜி.கண்ணன் தெரிவித்திருந்த நிலையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட தனிப்படையில் கூடுதலாக புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.