தீவிரமடைந்து வரும் கரோனா தொற்றை தடுக்க பல்வேறு கட்டுபாடுகளை விதித்து அரசும் மருத்துவதுறையும் போராடி வரும் நிலையில் அதையும் கடந்து கரோனா அரசையும், மருத்துவதுறையையும் அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்து விட்டது. அதில் பலி எண்ணிக்கை 1,450 ஆக அதிகாித்துள்ளது.
இதில் குமாி மாவட்டத்தில் 664 போ் பாதிக்கபட்டதோடு 5 போ் மரணமடைந்துள்ளனா். இந்த நிலையில் தமிழகம் முமுவதும் இன்று முமு ஊரடங்கு அறிவிக்கபட்டது. இதற்கிடையில் ஏற்கனவே குமாி மாவட்டத்தில் கடைகள், வா்த்தக நிறுவனங்கள் இரவு 8 மணி வரை திறந்து செயல்பட்ட நிலையில் ஜூலை 1-ம் தேதியில் இருந்து மாலை 5 மணி வரை தான் திறக்க அனுமதிக்கபட்டுள்ளது.
மேலும் வாரம் தோறும் ஞாயிற்று கிழமை முமு ஊரடங்கு அறிவிக்கபட்டியிருக்கும் நிலையில் இன்று ஊரடங்கையொட்டி மாவட்டம் முமுவதும் கிராமங்களில் கூட கடைகள் அடைக்கபட்டன. மேலும் கிராமங்களில் வீடுகளில் நடத்தப்படும் கடைகள், டீ ஸ்டால், ஓட்டல்களும் அடைக்கபட்டன. அதேபோல் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இரு சக்கர வாகனங்களை கூட சாலைகளில் காண முடியவில்லை. அத்தியாவசிய தேவைக்கு கூட வெளிய சென்றவா்களை காவல் துறையினா் விசாாித்து அனுப்பினாா்கள்.
ஊரடங்கு எந்த வித தளா்வுமின்றி மாவட்ட நிா்வாகம் கேட்டு கொண்டது போல் மக்களும் முமு ஒத்துழைப்பு அளித்து ஊரடங்கை கடைபிடித்தனா்.