Skip to main content

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜேஷ்டாபிஷேக வைபவம் தொடக்கம்! சாலையில் நின்று கைங்கர்யத்தை தரிசனம் செய்த மக்கள்!!

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

Jashtabhishekam begins in Trichy Srirangam! People standing on the road and praying the rituals

 

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும். ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனிமாதம் கேட்டை நட்சத்திரம் அன்று ஆனி திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் ஸ்ரீரெங்கநாதருக்கு நடத்தப்படும். மிகவும் விஷேசமான ஜேஷ்டாபிஷேகத்தின்போது அன்று காலை கருட மண்டபத்திலிருந்து தங்க குடம் எடுத்து வந்து, அம்மா மண்டபம் புனித திருக்காவிரியிலிருந்து கோவில் யானை ஆண்டாள் மீது திருமஞ்சனம் (புனிதநீர்) வைக்கப்பட்டு கோவில் அர்ச்சகர்களால் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியுடன் 4 பேர் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து புனிதநீர் அடங்கிய தங்கக்குடம் வைத்து மங்கள வாத்தியங்கள் முழங்கிட உள்பிரகாரங்களில் வலம்வந்து, பின்னர் மூலஸ்தானம் கொண்டு செல்லப்பட்டது. மூலவருக்குச் சாற்றப்பட்டிருக்கும் அங்கில்களைக் களைந்து திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு பச்சைக் கற்பூரம் சாற்றப்பட்டு மறுபடியும் அங்கில்கள் சாற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இன்று (23.06.2021) மாலை நம்பெருமாளுக்கு தைலக்காப்பு அலங்காரம் சாற்றப்பட உள்ளது. திருக்கோவில்கள் நடை அடைக்கப்பட்டிருந்ததால் கைங்கர்யத்தைக் காண முடியாத பக்தர்கள், வழி நெடுகிலும் திரண்டிருந்து புனிதநீர் கொண்டு செல்லும் கைங்கர்ய நிகழ்சியினைக் கண்டு வணங்கியபடி நின்றனர்.

 

Jashtabhishekam begins in Trichy Srirangam! People standing on the road and praying the rituals

 

அதேநேரம் தைலக்காப்பு சாற்றப்பட்டிருப்பதால் இன்றுமுதல் 48 நாள் நம்பெருமாள் (மூலவர்) திருவடிசேவை கிடையாது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செ. மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்