Skip to main content

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 15-ந்தேதி ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

Published on 13/09/2017 | Edited on 13/09/2017
ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 15-ந்தேதி ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு



அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்ததிற்கு இடைகால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருப்பினும் தடையை மீறி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இதனை மனுதாரர் ஜகோர்ட் மதுரை கிளை கவனத்திற்கு கொண்டு சென்றார். அப்போது நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதிகள் அனுமதி அளித்தனர் தடையை மீறி போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வருகிற 15ம் தேதி உயர் நீதி மன்ற மதுரை கிளையில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் நீதிமன்ற நோட்டிசை போலீசார் அவர்களுக்கு  வழங்க வேண்டும். வருகிற 15ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

-முகில்

சார்ந்த செய்திகள்