Published on 11/06/2018 | Edited on 11/06/2018
சென்னையில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தைதை கொண்டுவரவேண்டும். உயர்த்தப்பட்ட ஊதியத்திற்கான 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்கிடவேண்டும் போன்ற பல கோரிக்கைளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் நடந்துவரும் போராட்டத்தில் சுமார் 200 மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் இன்று மாலை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்தார்.