ஜெ. மரணம் குறித்த விசாரணைக் கமிஷன் விரைவில் அமைக்கப்படும் –கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிய பேருந்து இயக்கத்தினை செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணைக் கமிஷன் விரைவில் அமைக்கப்படும். சென்னை போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை விரைவில் நினைவில்லமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.