ஜெ., மரணம் அடையும் வரை, தினகரனை போயஸ் இல்லத்தில் அனுமதித்தது இல்லை: மதுசூதனன்
ஜெயலலிதா மரணம் அடையும் வரை, டிடிவி தினகரனை ஜெயலலிதா போயஸ் இல்லத்தில் அனுமதித்தது இல்லை என ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தவர் தான் வெற்றிவேல், அவர் அதிமுகவே இல்லை. முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடையும் வரை, டிடிவி தினகரனை போயஸ் இல்லத்தில் அனுமதித்தது இல்லை. ஜெயலலிதாவின் உதவிக்காக வந்தவர் தான் சசிகலா.
மேலும், கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான், அதிமுகவை ஓ.பன்னீர்செல்வம் வழி நடத்துவார் என கூறியுள்ளார்.