தமிழகத்தில் ‘‘ஆபரேஷன் பார்க்கிங் சர்ச்’’ என்ற பெயரில் எஸ்பிகே நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரைக்கு சொந்தமான சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் ஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த ஆபரேசனை சுருக்கினால் ஓபிஎஸ் என்று வரும். இதனால் சுருக்கமாக இந்த ரெய்டுக்கு ஓபிஎஸ் (ஆபரேஷன் பார்க்கிங் சர்ச்) என்றே வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்தனர். கடந்த திங்கட்கிழமை தொடங்கிய இந்த சோதனை இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
சுமார் 4 நாட்களுக்கு மேலாக சென்னை, மதுரை, விருதுநகர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 180 கோடி ரூபாய் பணம் மற்றும் 105 கிலோ தங்கம், ரூ.10 கோடிக்கு வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகான மிகப்பெரிய பணப்பறிமுதல் என பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில், இந்த சோதனைக்கும், ஓபிஎஸ்க்கும் எந்த தொடர்பும் இல்லை. இருப்பினும் எதற்காக இந்த பெயர் வைத்தனர் என்பது மர்மமாக உள்ளது. கடந்த சில நாட்களாக மத்திய அரசுடன், ஓபிஎஸ் ரகசியமாக பேசி வருகிறார். இதனால்தான் அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.