Published on 18/12/2021 | Edited on 18/12/2021
மத்திய அரசின் மொழி திணிப்பு தொடர்பாகத் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பிவருபவர் மதுரை எம்.பி.யும், எழுத்தாளருமான சு. வெங்கடேசன். குறிப்பாக மத்திய அரசு மாநில அரசுடன் அலுவல்களை மேற்கொள்கையில் மொழி திணிப்பு நடைபெறுவதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டிவருகிறார்.
இந்நிலையில், சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ''வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் திருத்தம் கோரி விண்ணப்பித்தால் இந்தியில் பெயரை மாற்றி அனுப்பி இருக்கிறார்கள். கேட்டால், தொழில்நுட்ப தவறு என்பார்கள். தொழில்நுட்பங்கள் எல்லாம் இந்தியிலே தவறு செய்வது எப்படி? தவறு செய்வதற்காகவே ஒரு மொழியைப் பயன்படுத்துதல் தவறில்லையா?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.