Skip to main content

அரசு மருத்துவமனையில் வயிற்றுவலிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் இரும்பு கம்பி!!

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

 

ராமநாதபுரம் ஏர்வாடி கிராமத்தில் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட மாத்திரையில் ஸ்டெப்லர் பின் அளவில் இரும்பு கம்பி இருந்தது அங்கு சிகிக்சை பெற்றுவரும் நோயாளிகள்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 The iron wire on the tablet given to the stomach in the govt hospital

 

ராமநாதபுரம் மாவட்டம் ஏராந்துறை கிராமத்தை சேர்ந்த பாண்டி, சக்தி ஆகியோர் வயிற்று வலிக்காக சிகிச்சை பெற ஏர்வாடி அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

 

 The iron wire on the tablet given to the stomach in the govt hospital

 

அப்போது அவர்களுக்கு சிப்ரோப்ளோக்சின் மாத்திரை கொடுக்கப்பட்டது. அந்த மாத்திரையானது இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த பையோ ஜெனட்டிக் ட்ரக்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மாத்திரையை ஆகும். அந்த மாத்திரையை  இரண்டாக உடைத்து உட்கொள்ளும்படி செவிலியர் அறிவுறுத்த அந்த மாத்திரையை உட்கொள்ள இரண்டாக உடைத்தபோது அந்த மாத்திரையின் நடுவில் ஸ்டேப்ளர் பின் அளவில் இரும்பு கம்பி இருந்தது. இதைக்கண்டு அதிர்ந்த பாண்டி தனக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையை உடைத்தபோதும் அதிலும் அப்படியே இருந்துள்ளது. 

 

 The iron wire on the tablet given to the stomach in the govt hospital

 

இதுகுறித்து சக்தி மற்றும் பாண்டி ஆகியோர் மருத்துவமனை ஊழியர்களிடம் புகாரளித்த போது  தெரியாமல் நடந்திருக்கும் என ஊழியர்கள் அலட்சியம் காட்டியதாக கூறினர். 

இந்நிலையில் சிப்ரோப்ளோக்சின் மாத்திரைகளை அனைத்து மாவட்ட மருத்துவ கிடங்கிலிருந்தும் நீக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்