Skip to main content

ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக அரசு அதிரடி

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

I.P.S. Transfer of Officers; Tamil Nadu Government takes action

 

16 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், ‘குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி பிரிவு டிஜிபியாக இருந்த வன்னிய பெருமாள், ஊர்க்காவல் படை டிஜிபி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவலர் பயிற்சி கல்லூரி ஐஜியாக இருந்த தமிழ்ச்சந்திரன், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

திருநெல்வேலி மாநகரக் காவல் ஆணையராக மகேஸ்வரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு ஐஜி ஆக ஜோஷி நிர்மல் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு மண்டல சட்டம், ஒழுங்கு காவல் இணை ஆணையராக அபிஷேக் தீட்சித் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு டிஐஜி ஆக திஷா மிட்டல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமையக டிஜஜி ஆக ஐபிஎஸ் அதிகாரி சாமுண்டீஸ்வரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக சாம்சன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளராக ஹரி கிரண் பிரசாத் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்து தீபா சத்யன், தமிழக காவல்துறை நிர்வாக பிரிவு ஏ.ஐ.ஜி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

இவர்களுடன் 5 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  அதன்படி, தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக சுரேஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக சுந்தரவடிவேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பிரபாகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி  மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக  சுந்தரவதனம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்