இ.பி.எஸ். ஓ.பி.எஸ். உருவபடங்களை செருப்பால் அடித்து தீவைத்தனர்
முதல்வர் இ.பி.எஸ். கூட்டிய பொதுக்குழு வில் பொதுச்செயலாளர் சசிகலாவையும். துணைபொதுச்செயலார் டி.டி.வியையும் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டனர். இதனால் டென்சன் அடைந்த டி.டி.வி. ஆதரவாளர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இ.பி.எஸ். ஓ.பி.எஸ். உருவபொம்மைகளை எரித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள டி.டி.வின் ஆதரவாளர்களான வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ். நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் நல்லதம்பி. நிலக்கோட்டை ஜெ பேரவை செயலாளர் ராஜேந்திரன் உள்பட பத்துக்கு மேற்பட்ட ர.ர.க்கள் வத்தலக்குண்டில் உள்ள காளியம்மன் கோவில் அருகே நின்று இ.பி.எஸ். ஓ.பி.எஸ். மற்றும் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் ஆகியோர்ருக்கு எதிராக கோஷம் போட்டவாரே கையில் வைத்து இருந்த இ.பி.எஸ். ஓ.பி.எஸ். சீனிவாசன் ஆகியோர் பிளாஸ்டிக் படங்களை பிடித்து கொண்டு சின்னம்மாவையும். அண்ணன் டி.டி.வியையு பொருப்பிலிருந்து தூக்கிய இ.பி.எஸ். ஓ.பி.எஸ். சீனிவாசன் ஒழிக என்று கோஷம் போட்டவாரே தங்கள் காலில் போட்டு இருந்த செருப்பை கழட்டி அடித்த வாரே அந்த உருவ படங்களை தீவைத்து கொளுத்தினார்கள்.
அதோடு சின்னம்மாவுக்கும். அண்ணன் டி.டி.விக்கும் துரோகம் செய்த இந்த ஆட்சி நீடிக்க கூடாது என்று கோஷம் போட்டனர். இப்படி அரைமணி நேரம் அரசுக்கு எதிராக கோஷம் போட்டு முதல்வர். துணை முதல்வர் மற்றும் அமைச்சர் சீனி படங்களை எரித்த பின் ஆடி அசைந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் வந்த காக்கிகள் டி.டி.வி. ஆதரவாளர்களை மடக்கி பிடித்து. கைது செய்தது இதனால் வத்தலக்குண்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-சக்தி