நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் விசாரணை அதிகாரி ஆஜராகாததால் நால்வரின் ஜாமின் மீதான விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுபோல் உதித்சூரியா தந்தை வெங்கடேசனின் நீதிமன்ற காவல் காவலை நீடிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களான உதித் சூர்யா, பிரவீன், ராகுல் அவர்களின் தந்தையான டாக்டர் வெங்கடேஷ், சரவணன் டேவிஸ், முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முகமதின் மகன் முகமது ருப்பின் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தது தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
டாக்டர் வெங்கடேஷ் முகமது சபி ஜாமின் மனுக்களை தேனி நீதிமன்ற நடுவர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. பிரவீன் ராகுல் அவரது தந்தையான சரவணன் ஆகியோர் ஜாமீன் மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தது சிபிசிஐடி தரப்பில் திண்டுக்கல் எஸ்ஐ கணேசன் தேனி போலீஸ் சிவலிங்கம் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் தரப்பில் சென்னை வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜரானார். விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வராததற்கு கண்டிப்பு தெரிவித்த நீதிபதி பன்னீர்செல்வம் "முக்கிய விசாரணைக்கு ஜாமீன் கோரும் போது அவர் ஆஜராக வேண்டும் என்பது தெரியாதா" என கண்டனம் தெரிவித்தார்.
அவர் வேறு பணிக்காக சென்னை சென்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளை அவர் ஆஜராக வேண்டும் எனக்கூறி ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று நீதிபதி ஒத்திவைத்தார். அதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதித்சூரியா அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரின் காவலையும் வருகிற 24-ம்தேதி வரை நீடித்து நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்!