புதுக்கோட்டை கலீப்நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சமம் இயக்கம் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழாவையொட்டி பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசு வழங்கும் நிகழ்விற்கு சமம் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.உஷா நந்தினி தலைமை தாங்கி அவர் பேசியதாவது : “ பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள். கல்வித்துறைகளிலும் சிறப்பான பங்களிப்பைச் செய்து வருகிறார்கள். ஆனால் குடும்பம் என்று வந்தவுடன் வீட்டிற்குள் முடங்கிவிடுகிறார்கள். அதிக மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள்.
பெண்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாகப் பேசவும்,பெண்களின் பங்கேற்பை உறுதிப் படுத்தவும், பெண்களின் பணிகளை பாராட்டவும், அவர்களை பாதுகாக்கவும் அனைவரும் முன்வரவேண்டும். மேலும் இதுபோன்ற பொதுநிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம் அவர்களுக்கிடையே உள்ள தயக்கத்தை உடைக்க முடியும் என்றார். கிளைச் செயலாளர் வித்யா வரவேற்றுப்பேசினார். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் அ.மணவாளன் பரிசு வழங்கினார். மாவட்டச்செயலாளர் எம்.வீரமுத்து வாழ்த்துரை வழங்கினார். கிளைப்பொறுப்பாளர்கள் சிந்து, பூங்கொடி, சித்ரா ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பெண்களும், 40க்கும் மேற்றப்பட்ட துளிர் இல்லக்குழந்தைகளும் கலந்துகொண்டனர்.