செந்தில் பாலாஜி நிதியைப் புறக்கணித்தது ஏன் ? என்பது குறித்து விளக்கமளித்த முதல்வர் பழனிசாமி, "தொகுதி மேம்பாட்டு நிதி வழிமுறைப்படி சம்பந்தப்பட்ட பகுதிகளில் தான் நிதியைப் பயன்படுத்த முடியும்.எம்எல்ஏக்களின் பரிந்துரைப்படி வரையறுக்கப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.இதை அறியாமல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வழிமுறைகளின்படி செய்ததைத் குறை கூறியுள்ளார்" என்றார்.
இதனிடையே அனைத்து எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 1 கோடியை பிடித்தம் செய்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
கரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிக்காக ரூபாய் 1 கோடி நிதியைச் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஒதுக்கியிருந்தார்.மேலும் கரூர் அரசு மருத்துவமனை உள்பட பல மருத்துவமனைக்கு உபகரணம் வாங்க நிதியைப் பயன்படுத்தவும் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.