![cn](http://image.nakkheeran.in/cdn/farfuture/em1-GxjeX9ujIheWQNWt54GEq12r_RVEUa6wAK7GRrw/1662725502/sites/default/files/inline-images/hjkl_26.jpg)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3570 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை அவர் துவங்கினார். ராகுல்காந்தியுடன், தமிழக காங்கிரஸ் தலைவர்கள், ஏராளமான தொண்டர்கள் என இணைந்து நடைபயணம் மேற்கொண்டுவருகின்றனர். இந்த நடைபயணத்தில் ஏராளமான நபர்களை அவர் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
இதில், நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவி அனிதா குடும்பத்தினரைச் சந்தித்தார். மேலும் தமிழக விவசாயச் சங்க பிரதிநிதிகள் மற்றும் பிரபல உணவு யூடியூப் சேனல் குழுவினர் அவரை சந்தித்துப் பேசினார்கள். இதற்கிடையே நடைபயணத்தின் ஒருபகுதியாக செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தியிடம் தமிழ் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அவர், "நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் அழகான மொழி. ஆனால், கற்றுக்கொள்வதற்கு கடினம் என நினைக்கிறேன். ஆனால் அதற்கான முயற்சியில் ஈடுபடுவேன்” என்றார்.