Skip to main content

'பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது' - தமிழக அரசு விளக்கம்

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

nn

 

அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆவணப் பதிவுக் கட்டணம் உயர்வு தொடர்பான விளக்கத்தைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆவணப் பதிவுக் கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து மூன்று சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதில், 'வரும் 10/7/ 2023 முதல் ஒரு சதவீதமாக இருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கான பத்திரப்பதிவு கட்டணம் மூன்று சதவீதமாக உயர்த்தப்படுவதாக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த உயர்த்தப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்படுவதற்கு முன்பாக பத்திரப் பதிவு செய்பவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் எனத் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

 

மேலும் இது குறித்த அறிவிப்பில், 'சொந்த வீடு வாங்குவதற்குப் பதிவுக் கட்டணம் உயர்வு எனப் பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது. 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இருந்த அதே நடைமுறை தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. முழுவதுமாக கட்டி முடித்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமான கிரய ஆவணமாகவே பதிவு செய்ய வேண்டும். நிறுவனங்களிடம் இருந்து கிரயமாக வாங்காமல் கட்டுமான ஒப்பந்தம் மட்டுமே செய்தால் குடியிருப்பை மறு கிரயம் செய்வதில் பிரச்சனை ஏற்படலாம். கட்டுமான ஒப்பந்தம் செய்து குடியிருப்பை வாங்க உத்தேசிக்கும் மக்களுக்கு அதே நடைமுறை பின்பற்றப்படும்' என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்