Published on 16/11/2018 | Edited on 16/11/2018

சென்னையிலிருந்து தினம்தோறும் காலை 6.25 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் 7.10 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்டுச் செல்லும் இண்டிகோ விமானமானது இன்று காலை தாமதமாக 7.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை நெருங்கிகொண்டிருந்தது. அப்போது திருச்சி விமானநிலையத்தில் கஜா புயலின் காரணமாக மழையுடன் பலமான காற்று வீசி வந்தது. இதனால் விமானம் தரையிறங்க முடியாமல் வானில் மூன்று முறை வட்டமடித்து மீண்டும் தரையிறங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை நோக்கி திருப்பி அனுப்பப்பட்டது.