
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்ய வேண்டும் என திருவாரூர் மாவட்ட திமுக செயல்வீர்கள் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் திமுக நகர கழக அலுவலகத்தில் கலைஞருக்கு அஞ்சலி கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலைஞர் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது திருவுரு படத்திற்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலைஞர் கட்டி காத்த திமுகழகத்தை வழிநடத்த தகுதி பெற்ற மு.க.ஸ்டாலின் அவர்களை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக தேர்தெடுக்க வேண்டும் என ஒரு மனதாகதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட 13 முறையும் வெற்றி பெற்று தோல்வியே காணத, 5 முறை முதல்வராக பதவி வகித்த மறைந்த கலைஞர் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.