![Indian Student Union struggle against exemption from NEET](http://image.nakkheeran.in/cdn/farfuture/tmfwarI4ZmUdQ8YiTUI1m4YiHK-bPDB1LbBGSk1HoiA/1641968002/sites/default/files/2022-01/sfi-neet-4.jpg)
![Indian Student Union struggle against exemption from NEET](http://image.nakkheeran.in/cdn/farfuture/fcuen5KBIM0alvZw1LPPdyx1MBUggRMN3MzTa75ztDE/1641968002/sites/default/files/2022-01/sfi-neet-3.jpg)
![Indian Student Union struggle against exemption from NEET](http://image.nakkheeran.in/cdn/farfuture/SngMoopWGhzCKXZEHGGensTbk4uHXgrt9U53LAGXPPE/1641968002/sites/default/files/2022-01/sfi-neet-1.jpg)
![Indian Student Union struggle against exemption from NEET](http://image.nakkheeran.in/cdn/farfuture/40YSmcPQ1jDkHYBfHR_0aTwySPp8HC569vFnUo5pGOc/1641968002/sites/default/files/2022-01/sfi-neet-2.jpg)
Published on 12/01/2022 | Edited on 12/01/2022
இன்று பிரதமர் நரேந்திர மோடி கணொளி வாயிலாக தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைக்க இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு சார்பில் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி அனைத்துக் கட்சி கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் இன்று வரை அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் தமிழக அரசு கோரும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி இந்திய மாணவர் மாநில சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் சைதாப்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.