கர்நாடக மாநிலம் உமாராணி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீமந்தா இட்னாலி(40) - சாவித்ரி தம்பதியினர். ஸ்ரீமந்தா மதுவிற்கு அடிமையானதால், தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டையிடுவதை வழக்கமாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இதுதொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டும் வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த மாதம் 9 ஆம் தேதி சாவித்ரிக்கு சொந்தமான நிலம் ஒன்றை விற்று தனக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கணவர் ஸ்ரீமந்தா வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சாவித்ரி கணவன் ஸ்ரீமந்தாவின் கழுத்தை நெரிந்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது முகத்தில் கல்லைத் தூக்கிப்போட்டுச் சிதைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கணவரின் உடலை இரண்டுத் துண்டாக வெட்டிய மனைவி சாவித்ரி உடலை வீட்டிற்குப் பின்புறம் உள்ள புதர் ஒன்றியில் வீசிவிட்டுவந்துள்ளார். அதன்பிறகு அந்த பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் போலீசாருகு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த உடல் ஸ்ரீமந்தா என்பதை உறுதி செய்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மனைவி சாவித்ரியிடம் இருந்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த சாவித்ரியிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவன் ஸ்ரீமந்தாவை கொலை செய்ததது தான் தான் என்று ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் சாவித்ரியை கைது செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.