Published on 27/02/2022 | Edited on 27/02/2022
தேனியில் அடுக்கு மொழியில் பேசிய மனநலம் பாதித்த இளைஞர் ஒருவரை வீடியோ எடுத்த புகாரில் பெண் காவல் ஆய்வாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போலீசார் விசாரணை போது போலீசாரை சிரிக்க வைக்கும் வகையில் அடுக்கு மொழியில் மனநலம் குன்றிய இளைஞர் ஒருவர் பேசும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை அடுக்கு மொழியில் பேச வைத்து வீடியோ எடுத்த புகாரில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய பெண் ஆய்வாளர் மதன கலா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.